/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/88_26.jpg)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து மகான் படத்தில் நடித்துள்ளனர்.சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெவ்வேறு காலகட்டங்களில் கதைகள் நகருவதுபோல அமைக்கப்பட்டுள்ள இப்படம் நேற்று(10.2.2022)அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் துருவ்விக்ரம்நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயார் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்திய பேட்டியில், "நானும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யும்சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள், அவர் நல்ல கதையுடன் வந்தால் அந்த படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் எனத்தெரிவித்துள்ளார். மேலும் அந்தப்படம்பாலிவுட் படங்களை போல இரு நடிகர்களின் வாரிசுகள்இணையும் படமாகஇருக்கும் எனவும் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)